யாரு சாமி நீ? தொடர்ந்து 5 அரைசதம் விளாசி சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா இளம் வீரர்!
South African Matthew Breetzke half centuries first five ODI debuts
தென்னாப்பிரிக்க அணி தற்போது இங்கிலாந்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (செப்டம்பர் 4) லார்ட்ஸில் நடைபெற்றது. கடுமையான சவாலுடன் நடைபெற்ற இப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
அந்தப் போட்டியில் மேத்யூ ப்ரீட்ஸ்க் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 77 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன் மூலம், அவர் தனது முதல் 5 ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் கடந்த அரிய சாதனையை படைத்தார்.
அவரின் ஒருநாள் போட்டிகளில் இதுவரை பெற்றுள்ள ரன்கள்:
* 150 (148 பந்துகள்) – நியூசிலாந்துக்கு எதிராக
* 83 (84 பந்துகள்) – பாகிஸ்தானுக்கு எதிராக
* 57 (56 பந்துகள்) – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
* 88 (78 பந்துகள்) – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
* 85 (77 பந்துகள்) – இங்கிலாந்துக்கு எதிராக
இந்தச் சாதனை ப்ரீட்ஸ்கை தென்னாப்பிரிக்க அணியின் எதிர்கால நம்பிக்கையாக ரசிகர்களிடம் நிலைநிறுத்தியுள்ளது. வரவிருக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 7 அன்று நடைபெற உள்ளது.
English Summary
South African Matthew Breetzke half centuries first five ODI debuts