தனியார் நிறுவனங்களில் பணி நேரம் அதிகரிப்பு: மஹாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல்..!
Increase in working hours in private companies in Maharashtra
மஹாராஷ்டிராவில் தனியார் நிறுவனங்களில் வேலை நேரம் 09 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்தப்படவுள்ளது. வேலை நேரம் தொடர்பான சட்ட விதிகளில் திருத்தம் செய்வதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது, முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்புபகளை உருவாக்கவும் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
இந்த நடைமுறை தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே அமலில் உள்ளது. குறித்த சட்ட திருத்தம் மூலம், 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் நிறுவனங்களின் தினசரி பணி நேரம் 10 மணி நேரமாகவும், தொழிற்சாலைகளின் பணி நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Increase in working hours in private companies in Maharashtra