பக்தர்கள் கவனத்திற்கு! சந்திர கிரகணத்தை முன்னிட்டு பல கோவில்கள் மூடல்!
Chandra kirakanam temple close
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானத்தின் பல கோவில்கள் செப்டம்பர் 7ஆம் தேதி பகல் முதலே மூடப்படுகின்றன.
இதில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், திருப்பதி கோவிந்தராஜசுவாமி கோயில், கோதண்டராம சுவாமி கோயில், கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், ஸ்ரீனிவாசமங்காபுரம் மற்றும் அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்டவை அடங்கும்.
2025 செப்டம்பர் 7 இரவு 11:01 மணிக்கு முழு சந்திர கிரகணம் தொடங்கி, 12:23 மணிக்கு நிறைவடைகிறது. இந்த முழு கிரகணம் 82 நிமிடங்கள் நீடிக்கும். அதற்கு முன், இரவு 10:28 மணிக்கு பகுதி கிரகணம் ஆரம்பமாகி, கிரகணத்தின் இறுதி கட்டம் செப்டம்பர் 8 அதிகாலை 1:56 மணிக்கு முடியும்.
கிரகண காலத்தில் கோவில்களின் நடை மூடப்பட்டு, எந்தவொரு தரிசனமும் நடைபெறாது. கிரகணம் முடிந்த பின் சாந்தி பூஜைகள் நடத்தப்பட்ட பிறகே மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால், அந்த நாளில் கோவிலுக்கு வருவோர் கிரகண நேர அட்டவணையை கருத்தில் கொண்டு திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
Chandra kirakanam temple close