அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது... தேனியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!
ADMK EPS Theni Speech Sengottaiyan issue
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் விவசாயம் அதிமுக எடப்பாடி பழனிசாமி TN Chief Minister mk stalin EPS Edappadi Palanisami
தேனி கம்பம் வாரச்சந்தை அருகே நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியார்.
அப்போது அவர் கூறியதாவது: எம்.ஜி.ஆர் தொடங்கியதும், ஜெயலலிதா வளர்த்தும் வந்த அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. கட்சி எப்போதும் மக்களின் ஆதரவுடன் வலிமையாக நிற்கும்.
அதிமுக ஆட்சி அமைந்ததும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டமும், மணமகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்படும். இளைஞர்களின் கல்விக்கும், பெண்களின் எதிர்காலத்துக்கும் உதவும் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
விவசாயிகள் குறித்து பேசும் போது, உடம்பிற்கு உயிர் எவ்வளவு அவசியமோ, விவசாயிக்குத் தண்ணீர் அதைவிட முக்கியம் என அவர் வலியுறுத்தினார். ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயத்தின் அவசியம், விவசாயிகளின் துயரம் குறித்த புரிதலே இல்லை என்று குற்றஞ்சாட்டினார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் பூர்த்தி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், அதிமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட குடிமராமத்து திட்டம் மீண்டும் முறையாக தொடங்கப்படும் எனவும், விவசாயிகளுக்காக 24 மணி நேரமும் இடையறாது மும்முனை மின்சாரம் வழங்கியதே அதிமுக அரசு எனவும் பழனிசாமி நினைவூட்டினார்.
English Summary
ADMK EPS Theni Speech Sengottaiyan issue