வயிற்றெரிச்சலில் பேசாதீங்க யுவராஜ், வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! சர்ச்சையை உண்டாக்கிய யுவராஜ்!  - Seithipunal
Seithipunal


இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியானது கடந்த 24ஆம் தேதி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.  2 நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டி, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 112 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து முதல் இனிங்ஸில் விளையாடிய இந்திய அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 81 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு 49 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி எட்டி பிடித்து வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து கூறுகையில், இந்த இரண்டு நாட்களுக்குள் டெஸ்ட் போட்டிகள் முடிவது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதா என்பது தெரியவில்லை. இது போன்ற விக்கெட்டுகளில் அணில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆடியிருந்தால் அவர்கள் 1000 மற்றும் 800 விக்கெட்டுகளில் அமர்ந்திருந்து இருப்பார்கள் என தன்னுடைய கருத்தினை தெரிவித்திருக்கிறார். இருப்பினும் அஸ்வினுக்கும், அக்ஸருக்கும் வாழ்த்துகள் எனவும் கூறியிருக்கிறார். 

இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலவாறான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். 400 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் எல்லா விக்கெட்டுகளையும் இதுபோன்ற ஆடுகளத்தில் மட்டுமே எடுக்கவில்லை. ஏன் இந்த வயிற்றெரிச்சல் என யுவராஜ் சிங்கை வறுத்தெடுத்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social media persons trolled yuvraj for his tweet about pitch


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal