"கண்ணீர் விட்டேன்" ஸ்ம்ரிதி மந்தனா பேட்டி! - Seithipunal
Seithipunal


சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தங்க பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறது. இது இந்தியாவிற்கு கிடைத்த இரண்டாவது தங்கமாகும்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணி முதல் முயற்சியிலேயே தங்க பதக்கத்தை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. 

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா ஸ்ரீலங்கா அணிகள் மோதியது. முதலில் ஆடிய இந்திய அணி 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா  46 ரன்களும்  ஜெமிமா ரோட்டிக்ஸ் 42 ரன்களும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். 

117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 97 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தங்கப் பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறது. 

தங்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கூறுகையில், "இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதை டிவியில் பார்த்தோம். ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றபோது, போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தேன். தேசிய கீதம் இசைக்கப்பட்டது மற்றும் இந்தியாவின் தேசியக் கொடி உயர்ந்தது, அன்று பார்க்க முடியவில்லை. 

இன்று அதனை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அதனால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்று நான் நினைக்கிறேன், என் கண்களில் கண்ணீர் வந்தது. இந்திய அணியின் பதக்கப் பட்டியலில் பங்களிக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இன்று நாங்கள் எங்களால் சிறந்ததை வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சி." என ஆனந்தமாக தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Smriti Mandhana about winning gold medal in Asian games


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->