முதல் போட்டியிலேயே அசத்தல் ஆட்டம்.. சதமடித்து அசத்திய ஸ்ரேயாஸ் அய்யர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டிகள் கான்பூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் - சுப்மன் கில் களம் இறங்கினர். 

மயங்க் அகர்வால் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா வழக்கமாக மெதுவாக விளையாடினார். மறுபக்கம் ஆடிக்கொண்டிருந்த சுப்மன் கில் தனது நான்காவது அரைசதத்தை பதிவு செய்தார். அரைசதம் அடித்த சிறிது நேரத்திலேயே சுப்மன் கில் அவுட் ஆக்கினார். 

இதையடுத்து, கேப்டன் ரகானே களம் இறங்கினார். ரகானே பவுண்டரிகளை பறக்கவிட்டு அருமையாக விளையாடினர். தொடர்ந்து மெதுவாக ஆடி வந்த புஜாரா 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அடுத்தடுத்து விக்கெட்டுகள்  சரிந்த நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகானே 35 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து,  ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது.  ஸ்ரேயாஸ் அய்யர் தனது முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் இருந்த ஜடேஜாவும் தனது 17வது அரை சதத்தை பதிவு செய்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவர்கள் வீசப்பட்டது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. 

இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் தொடக்கத்தில் ஜடேஜா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர்  தனது முதல் போட்டியிலே சதம் அடித்து அசத்தினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shreyas iyer centurie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->