ஆசியக் கோப்பை தொடரில் மீண்டும் ஷ்ரேயஸ் ஐயர்! 
                                    
                                    
                                   Shreyas Iyer Asia Cup 2025 
 
                                 
                               
                                
                                      
                                            இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் தேசிய அணிக்குத் திரும்ப உள்ளார்.
2023 உலகக் கோப்பையிற்குப் பிறகு தேசிய அணியில் இடம் பெறாத அவர், டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் கடைசியாக ஆடினார். அதன்பின், பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து அவரை விலக்கி, இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வழங்கவில்லை.
2024 ஐபிஎல்லில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து அசத்திய அவர், பின்னர் பஞ்சாப் அணிக்கு ரூ. 26.75 கோடியில் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தொடரில் அவர் 604 ரன்கள் எடுத்ததுடன், பஞ்சாப் அணியை ஃபைனலுக்கே அழைத்துச் சென்றார்.
சையத் முஸ்டாக் அலி, ரஞ்சி, இரானி கோப்பைகளிலும் சிறப்பாக விளையாடிய அவர், சமீபத்தில் சாம்பியன் டிராபியில் 5 போட்டிகளில் 243 ரன்கள் குவித்து மீண்டும் தனது திறமையை நிரூபித்தார்.
இந்த நிலையில், UAEவில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை மற்றும் இந்தியாவில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் நடைபெறும் தொடருக்காக ஷ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் மைதானம் அகமதாபாத்தில் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கும். இரண்டாவது டெஸ்ட் அக்டோபர் 10 முதல் 14 வரை தில்லியில் நடைபெறும்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       Shreyas Iyer Asia Cup 2025