ஐபிஎல் தோல்வி எதிரொலி! சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஓய்வு!  - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த ஷேன் வாட்சன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் . 

ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்த ஷேன் வாட்சன் சிறந்த ஆல்-ரவுண்டராக விளையாடியவர். 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வலிமையான வீரராக விளங்கியவர். ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு பல இடங்களில் முக்கிய பங்காற்றி உள்ளார். 

இது தவிர ஐபிஎல் போட்டிகளில் மிகப்பெரிய பங்கை ஆற்றி உள்ளார். முதலில் ஆல்-ரவுண்டராக விளையாடிய வாட்சன் கடந்த இரண்டு வருடங்களாக சென்னை அணிக்கு பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கினார் முன்னதாகவே சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் ஐபிஎல் போட்டிகள் உள்ளிட்ட 20 ஓவர் போட்டிகளில் மட்டும் விளையாடி கொண்டிருந்தார். 

இந்த நிலையில் இந்த சீசனில் அவரால் சரியாக விளையாட முடியாத நிலையில், அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த வருடம் இறுதிப்போட்டியில் காலில் அடிபட்டு ரத்தம் வழியவழிய கடைசி வரை போராடிய ஆட்டம், அவருக்கு இந்திய ரசிகர்களிடம் மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shane Watson retire from all forms of cricket


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal