'திப்பு சுல்தான்- சிவாஜி மகாராஜா இடையிலான எந்தவொரு ஒப்பீட்டையும் எப்போதும் எதிர்ப்போம்' தேவேந்திர பட்நாவிஸ்..!
Devendra Fadnavis says we will always oppose any comparison between Tipu Sultan and Shivaji Maharaj
கடந்த 70 வருடங்களாக பள்ளிக் கூடங்களில் வரலாறு துல்லியமாக கற்பிக்கப்பட்டிருந்தால், எந்தவொரு முஸ்லிமும், முகாலாய மன்னர் அவுரங்கசீப்பை ஹீரோ என கருதிருக்கமாட்டார் என மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
அம்மாநில சட்டசபையில் தேவேந்திர பட்நாவிஸ் பேசுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
முன்னதாக NCERT புத்தகங்களில் 17 பக்கங்களில் முகாலய மன்னர்களை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. சிவாஜி மன்னர் குறித்து ஒரேயொரு பக்கத்திலும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது சிவாஜி மகாராஜாவுக்கு 20 பக்கங்களை உருவாக்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அத்துடன், கடந்த 70 வருடங்களில் பள்ளிகளில் வரலாறு துல்லியமாக கற்பிக்கப்பட்டிருந்தால், ஒரு முஸ்லிம் கூட அவுங்கரசீப்பை ஹீரோ என கருதியிருக்கமாட்டார் என்றும், படையெடுத்தவர்களை ஹீரோக்களாகக் கருதுபவர்களை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம் என்று தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், திப்பு சுல்தான் நல்லவரா? கெட்டவரா? என்ற விவாதத்திற்கு தான் செல்லவிரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளதோடு, எனினும் திப்பு சுல்தான்- சிவாஜி மகாராஜா இடையிலான எந்தவொரு ஒப்பீட்டையும் நாங்கள் எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரிட்டீஷ்க்கு எதிராக திப்பு சுல்தான் போரிட்டிருக்கலாம். ஆனால், அவருடைய சொந்த ராஜ்ஜியத்தை காப்பாற்ற அவ்வாறு செய்தார் என்றும், ஆவர், 75 இந்துக்கள், 33 ஆயிரம் நாயர்களையும் கொன்றுள்ளார் என்று மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Devendra Fadnavis says we will always oppose any comparison between Tipu Sultan and Shivaji Maharaj