அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறை குறித்து தவெக தொடர்ந்த வழக்கு; 03 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்; உயர் நீதிமன்றம் உத்தரவு..!
High Court orders Tamil Nadu government to respond within 3 weeks in case filed by TVK
கடந்த ஆண்டு செப்டம்பரில் கரூரில் தவெக தலைவர் விஜய் அவர்களின் பரப்புரை கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு தயாரித்து வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளுக்காக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, கடந்த ஜனவரியில், தமிழக அரசு அரசியல் நிகழ்வுகளுக்காக அரசாணை வெளியிட்டது. இதில் உள்ள சில நிபந்தனைகள் தன்னிச்சையானவை மற்றும் பாரபட்சமானவை என தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் சம்பவத்திற்குப் பிறகு உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படியே இந்த விதிகள் வகுக்கப்பட்டன. இதில் என்ன தவறு இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும், இந்த மனு தொடர்பாக அரசு மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
English Summary
High Court orders Tamil Nadu government to respond within 3 weeks in case filed by TVK