இந்தியாவின் நிலைப்பாடு; 'மனிதகுலம் ஒருபோதும் மோதலுக்கு பலியாகக் கூடாது'; பிரதமர் மோடி..!
Prime Minister Modi said that humanity should never be a victim of conflict
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். பயணத்தின் இரண்டாவது நாளான இன்று இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன் போது பேசிய பிரதமர் மோடி; இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாகவுள்ளது: மனிதகுலம் ஒருபோதும் மோதலுக்கு பலியாகக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காசா அமைதித் திட்டத்தின் மூலம் அமைதிக்கான பாதை உருவாக்கப்பட்டுள்ள முயற்சிகளுக்கு இந்தியா முழுமையாக ஆதரித்துள்ளது. எதிர்காலத்திலும், அனைத்து நாடுகளுடனும் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பைத் இந்தியா தொடரும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், அக்டோபர் 07 ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலையும் பிரதமர் மோடி கண்டித்துள்ளார். மேலும், நேற்று இஸ்ரேல் நாடாளுமன்றமான 'நெசெட்'-இர் என்ற பெருமையும் மோடி பெற்றுள்ளார்.
அப்போது, "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட காசா அமைதி முயற்சி ஒரு பாதையை வழங்குகிறது. இந்த முயற்சிக்கு இந்தியா தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளதோடு, பாலஸ்தீன பிரச்சினையை நிவர்த்தி செய்வது உட்பட, பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கான வாக்குறுதியை அது கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம் என்று மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், நமது அனைத்து முயற்சிகளும் ஞானம், தைரியம் மற்றும் மனிதநேயத்தால் வழிநடத்தப்படட்டும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அமைதிக்கான பாதை எப்போதும் எளிதானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த பிராந்தியத்தில் உரையாடல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இந்தியா உங்களுடனும் உலகத்துடனும் இணைகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
English Summary
Prime Minister Modi said that humanity should never be a victim of conflict