காத்திருந்தவர்களை களமிறக்கிய கோலி! இந்தியா அபார பேட்டிங்!  - Seithipunal
Seithipunal


இந்தியா இலங்கை அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரின் இறுதிப் போட்டியானது என்று பூனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் லசித் மலிங்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

கவுகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இன்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? அல்லது இலங்கை அணி தொடரை சமன் செய்யுமா? என்ற நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. 

இந்திய அணியில் கடந்த மூன்று தொடர்களாக வாய்ப்பு பெற்றும் விளையாடும் அணியில் இடம்பெறாமல் வெளியில் காத்திருந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மணிஷ் பாண்டே ஆகிய இருவரும் இன்று அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். சஞ்சு சாம்சன் 73 போட்டிகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல பந்துவீச்சாளர் குல்தீப் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அணியில் சாஹல் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு அஞ்சலோ மேத்யூஸ் மற்றும் லக்ஷன் சண்டகண் இருவரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் ஷிகர் தவான் ஜோடி அபார தொடக்கத்தினை கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த நிலையில் ஷிகர் தவான் அரைசதம் கடந்து 52 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இலங்கை (விளையாடும் லெவன்): தனுஷ்கா குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் பெரேரா (வ), ஓஷாதா பெர்னாண்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தாசுன் ஷானகா, லக்ஷன் சண்டகன், வாணிந்து ஹசரங்கா, லசித் மலிங்கா (சி)

இந்தியா (விளையாடும் லெவன்): லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி (இ), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன் (வ), வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர், ஜஸ்பிரீத் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sanju samson got chance after 73 T20I matches


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal