நான் விலக தயார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அதிரடி.. நிம்மதியில் ஜடேஜா.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோற்றாலும். இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பு முடிவுக்கு வரவில்லை. இதற்கு முன்பு 2010ஆம் ஆண்டில் இதே போன்று சிஎஸ்கே தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோற்று இறுதியில் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இதேபோல 15வது சீசனிலும் சிஎஸ்கே வரலாற்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருப்பவர் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ். முதல் மூன்று போட்டிகளில் 0,1,1 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் நான்காவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது ருத்ராஜ் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் 13 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் தொடக்க ஆட்டக்காரராக டிவோன் கான்வே அல்லது சுப்ரான்ஷு சேனாபதி களமிறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆலோசனைக் கூட்டத்தில் தோனி, ருத்ராஜ் பேட்டிங் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் பெங்களூர் அணி உடனே போட்டு தான் உனக்கு கடைசி போட்டி,  திறமையை நிரூபித்தார் மட்டும்தான் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார். 

அப்போது பேசிய ருத்ராஜ், நான் அனைத்திற்கும் தயார். சிறப்பாக விளையாட வில்லை என்றால், என்னை நீக்கி விடுங்கள் எனக் கூறியுள்ளார். மேலும் முதல் நான்கு போட்டிகளில் விளையாடிய விதம், அவுட்டான விதம் குறித்து தொடர்ந்து தொலைக்காட்சியில் பார்த்து எங்கு தவறு செய்தேன் என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்பப் ருத்ராஜ் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் பயிற்சியின் போது அனைத்து பந்துகளையும் சிறப்பாக அடித்து விளையாடுகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், தோனி மற்றும் ஜடேஜா சற்று நிம்மதியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ruturaj back to form RCB match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->