இந்த டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா ஆட மாட்டாரா? அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பை தொடர் கோலாகலமாக தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த 17 ஆம் தேதிமுதல் தகுதி சுற்று ஆரம்பித்த நிலையில், நேற்று முன்தினம், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இதில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது.

இந்நிலையில், இன்று இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது.

இன்று மாலை நடைபெறும் 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலபாரியூட்ச்சை மேற்கொள்கிறது. 

முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடிய லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் அரைசதம் விளாசி அசத்தினர். அதே சமயத்தில் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் நன்றாக ஆடவில்லை. 

ரோகித் சர்மா இந்த பயிற்சி ஆட்டத்தில் களமிறக்கப்படவில்லை. இதனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று சமூகவலைத்தளங்களில் விவாதம் நடைபெற்றது. மேலும், இந்த டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா ஆட மாட்டார் என்றும் வதந்திகள் பரவின. 

இந்நிலையில், டி20 உலக கோப்பை போட்டியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- லோகேஷ் ராகுல் களம் இறங்குவார்கள் என்று, வதந்திகளுக்கு கேப்டன் விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்து விராட்கோலி அளித்துள்ள பெட்டியில், "ரோகித் சர்மா உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ரோகித் சர்மாவுடன், லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார்.

நான் (விராட்) மூன்றாவதாக களம் இறங்குவேன். பயிற்சி ஆட்டத்தில் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து, அவர்களின் செயல்பாடுகளை நாங்கள் பார்ப்போம்." என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rohit sharma in ind vs pak match


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal