மாநில தூதராக நியமிக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. முதலமைச்சர் அறிவிப்பு.!!
rishabh pant appointed uttarakhand state ambassador
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும், முக்கிய விக்கெட் கீப்பராக இருப்பவர் ரிஷப் பண்ட். இவர் இந்திய அணியில் டெஸ்ட், ஒருநாள் தொடர், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் என அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
தோனிக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். மேலும் தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை வெற்றி பெற்ற வைக்கிறார்.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில தூதராக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் மந்திரி புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட், இளைஞர்களிடையே விளையாட்டையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிப்பதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
English Summary
rishabh pant appointed uttarakhand state ambassador