இந்த மனசு தான் சார் கடவுள்! ஆப்கானுக்கு மொத்தமாக வாரி வழங்கி ரஷித் கான்! - Seithipunal
Seithipunal


ஆப்கானின் மேற்கு பகுதியில் நேற்று பிற்பகல் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது ஹெராட் பகுதியில் இருந்து வடமேற்கு திசையில் 40 கி.மீ. தொலைவில் மையம் கொண்ட அதே இடத்தில் அடுத்தடுத்து 5 முறை ரிக்டர் அளவில் 6.3 முதல் 4.6 வரை பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிய நிலையில் வீட்டைவிட்டு வெளியேறிய பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். ஆப்கானையே உலுக்கிய இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 2,000த்தை தாண்டியுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்களுக்கு உலக மக்கள் அனைவரும் ஆறுதல் கூறி வரும் இந்நிலையில் உலககோப்பைக்காக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரரான ரஷீத் கான் இந்த தொடரில் தனக்கு கிடைக்கும் அனைத்து போட்டிகளுக்கான முழு சம்பளத்தையும் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்களுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் "ஆப்கானிஸ்தான் மேற்கு மாகாணங்களை (Herat, Farah, Badghis) தாக்கிய நிலநடுக்கத்தின் துயரமான விளைவுகளைப் பற்றி நான் கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எனது உலகக்கோப்பை போட்டிக்கான சம்பளம் அனைத்தையும் நன்கொடையாக வழங்குகிறேன். விரைவில், தேவைப்படும் மக்களுக்கு ஆதரவளிக்கக்கூடியவர்களை அழைக்க நிதி திரட்டும் பிரச்சாரத்தை நாங்கள் தொடங்குவோம்" என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rashidkhan donates entire world cup match fee to Afghan earthquake victims


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->