லக்னோ அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் அதிரடியாக முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 63-வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து, களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர்  2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 32 ரன்களில் வெளியேறினார். 

ஜெய்ஸ்வால் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். படிக்கல் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 

கேப்டன் கே எல் ராகுல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா  தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்தை நாலாபுறமும் விளாசி, 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். குணால் பாண்ட்யா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குஜராத் அணி 13 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்று, 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. 

லக்னோ 13 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்ற 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. 

டெல்லி அணி 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 13 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் பஞ்சாப், ஹைதராபாத், சென்னை, மும்பை அணிகள் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan royals team point table 2nd place


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->