20 ஓவர் போட்டியில் இரட்டை சதம்! சாதனை படைத்த வெஸ்ட் இண்டீசின் ரகீம் கார்ன்வால்! - Seithipunal
Seithipunal


20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்து கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் மேற்கிந்திய தீவுகள் அணியின் ரகீம் கார்ன்வால். 

மேற்கின் தீவுகள் அணிக்காக ஆடுபவர் சுழற் பந்துவீச்சாளர் ரகீம் கார்ன்வால். மிக அதிக எடை கொண்ட வீரர் என்ற சிறப்புடன் அந்த நாட்டு அணியில் இடம் பெற்ற ராக்கிம் கார்ன்வால் சுழற் பந்துவீச்சாளராகவே அணியில் களம் இறங்கினார். ஆனால் அவரது பேட்டிங் திறனால், லீக் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகவும் விளையாடிக் கொண்டிருக்கிறார். 

சமீபத்தில் நடைபெற்ற முடிந்த கரிபியன் பிரிமியர் லீக் தொடரில் பர்போடாஸ் அணிக்காக அவர் விளையாடினார். அந்த போட்டி தொடரில் அவர் சிறப்பாக தனது பேட்டை சுழற்றச் செய்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் அட்லாண்டவில் நடைபெறும் அட்லாண்டா ஓபன் லீக் போட்டிகளில் அட்லாண்ட் ஃபயர் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். 

ஸ்கொயர் டிரைவ் அணிக்கு எதிராக ஆடிய அட்லாண்ட் அணிக்கு, தொடக்ககட்டக்காரராக களமிறங்கிய அவர் 77 பந்துகளில் 205 ர்களை குவித்து அனைவரையும் புருவம் உயர்த்தி பார்க்க வைத்திருக்கிறார். அவர் 22 சிக்ஸர்களையும் 17 பவுண்டரிகளையும் அடித்து, 39 பந்துகளில் 200 ரன்களை பவுண்டரி சிக்ஸர் மூலமாகவே திரட்டி இருக்கிறார். மீதமுள்ள 38 பந்துகளில் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ஐந்து ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். நின்ற இடத்தில் இருந்தே 200 ரன்களை  குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். 

ஒரு நாள் போட்டிகளிலேயே 200 ரன்களை அடிப்பது குதிரை கொம்பாக இருக்கும் நிலையில், இவர் 20 ஓவர் போட்டியிலேயே இரட்டை சாதத்தை அடித்து இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அட்லாண்ட் ஃபயர் அணி 326 ரன்கள் குவித்தது. ஸ்கொயர் ட்ரைவ் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் அட்லாண்ட் ஃபயர் அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி இருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahkeem Cornwall hits double century in T20 Match at Atlanta open league


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->