#IPL2023 : குஜராத் - மும்பை குவாலிஃபயர் 2 போட்டி மழையால் பாதிப்பு.. டாஸ் போடுவதில் தாமதம்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இதனையடுத்து கடந்த 24ம் தேதி நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 

இந்த குவாலிஃபயர் 2 போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் மே 28ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குவாலிஃபயர் 2 போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில்  7.20 மணிக்கு கள நடுவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

அந்த வகையில் இந்த போட்டிக்கான டாஸ் 7.45 மணிக்கு போடப்பட்டு 8 மணிக்கு போட்டி தொடங்கப்பட உள்ளது. ஒருவேளை இந்தப் போட்டி மழையால் தடைப்பட்டால் லீக் சுற்று போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகளை பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Qualifier 2 GT vs MI match toss delayed due to rain


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->