புரோ கபடி லீக் போட்டி : தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்! - Seithipunal
Seithipunal


11-வது புரோ கபடி லீக் போட்டி  நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் அடுத்ததாக உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரையும், பின்னர்  மகாராஷ்டிரா மாநிலம் புனேயில்  டிசம்பர் 3-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும், இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் புனேரி பால்டன், முன்னாள் சாம்பியன்கள் யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் கலந்து போட்டி போட உள்ளது.

இதற்கிடையே ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், யு மும்பா அணி, தபாங் டெல்லி அணியை எதிர் கொண்டது. இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 36-28 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ந்து இன்று நடைபெறும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் இரவு 8 மணிக்கும்,  புனேரி பால்டன் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இரவு 9 மணிக்கும் மோத உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pro kabaddi league match tamil thalaivas telugu titans clash today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->