லாரி மோதி நடன கலைஞர்கள் பலி ..திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பியபோது சோகம்! - Seithipunal
Seithipunal


திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பியபோது நடந்த சாலை விபத்தில் கலைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு சிவராமபுராவை சேர்ந்த 22 வயதான பிரஜ்வல் அதே பகுதியை சேர்ந்த  21 வயதான சகானா ஆகிய இருவரும் சில சினிமா படங்களில் பாடல்களுக்கு நடனமாடி உள்ளனர். இந்த நடன கலைஞர்கள் இருவரும் சினிமா தவிர , திருமணம், திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகளிலும் 2 பேரும் நடனமாடி அசத்தி வந்தார்கள்.

இந்தநிலையில் சம்பவத்தன்று துமகூரு மாவட்டம் குனிகல்லில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று முன்தினம் இரவு பிரஜ்வல், சகானா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பெங்களூருவுக்கு புறப்பட்டனர். அப்போது இரவு 11.30 மணியளவில் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே பெங்களூரு-குனிகல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அதே சாலையில் வந்த லாரி பயங்கரமாக மோதியது.அப்போது  மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரஜ்வல், சகானா ஆகியோர் பலத்தகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்ததும் நெலமங்களா போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது லாரியை டிரைவர் கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.மேலும் இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து  லாரியையும்  பறிமுதல் செய்தார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Many dancers lost their lives in a lorry accident It was a tragedy when they returned home after attending a wedding event


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->