புரோ கபடி லீக் போட்டி : இன்று தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதல்! - Seithipunal
Seithipunal


11-வது புரோ கபடி லீக் போட்டி  கடந்த 19-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் அடுத்ததாக உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரையும், பின்னர்  மகாராஷ்டிரா மாநிலம் புனேயில்  டிசம்பர் 3-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும், இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் புனேரி பால்டன், முன்னாள் சாம்பியன்கள் யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற உள்ளது.

இந்த நிலையில், இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகிறது.

இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் 2வது ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pro kabaddi league match tamil thalaivas gujarat giants clash today


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->