ஐபிஎல்லில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீரர்! வெளிநாட்டு தொடரில் விளையாட ஒப்பந்தம்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவை சேர்ந்த மூத்த கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பே கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சேர்க்கப்பட்டுள்ளார். அந்த நாட்டின் ரீபாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பொதுவாக இந்திய வீரர்கள் பிற நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாட கூடாது என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதியாகும்.  அதாவது இந்திய கிரிக்கெட் வாரியத்தால்  நடத்தக்கூடிய எந்த தொடரிலும் விளையாட மாட்டேன் என உறுதி அளித்து சென்றால் பிற நாட்டு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடலாம் என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதியாகும். 

இதன்படியே ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் துபாயில் நடைபெற்று வரும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரிலும் கனடாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் இந்தியாவில் நடைபெறும் எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. இந்த விதிகளை மீறி 48 வயதான பிரவீன் தாம்பே துபாயில் நடைபெற்ற போட்டிகளில் லீக் போட்டிகளில் பங்கேற்றார்.

இதனையடுத்து கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் 48 வயதான அவரையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. பின் நாட்களில் அவர் வெளிநாட்டில் ஆடியது தெரியவந்ததை அடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வெளிநாட்டு தொடர்களில் மட்டுமே விளையாடி ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில், தற்போது அவர் கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

இவர் சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட வில்லை என்றாலும் 40 வயதிற்கு மேல் ஐபிஎல் போட்டிகளில் ஜொலிக்க தொடங்கினார். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் ட்ராவிட் இவரை சரியாக பயன்படுத்தி உலகிற்கு தெரிய வைத்தார். இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pravin tambe Play for Trinbago Knight Riders In CPL2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->