உலகக்கோப்பை : இப்போவாது மனமிறங்கி வந்தீங்களே! நிம்மதி பெருமூச்சு விட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!  - Seithipunal
Seithipunal


ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியானது வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் இந்தியாவில் நடக்க இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் இந்தியா வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 10 அணிகளில் ஓர் அணியான பாகிஸ்தான் அணி தங்களுக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை என புலம்பி கொண்டிருந்தது. 

ஒவ்வொரு அணியும் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக முன்கூட்டியே இந்தியா வந்து கொண்டிருக்கும் நிலையில் எங்களுக்கு இன்னும் வீசாவே வரவில்லை என பாகிஸ்தான் புகார் தெரிவித்திருந்தது. காத்திருந்து காத்திருந்து பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம், ஒரு கட்டத்திற்கு மேல், புதன்கிழமை நாங்கள் இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறோம், ஆனால் இதுவரை எங்களுக்கு விசா வழங்கப்படவில்லை என ஐசிசி யிடம் புகார் தெரிவிக்கவே புறப்பட்டு விட்டது. 

இன்று மாலை வெளியான செய்திகளில் பாகிஸ்தான் அணி நிர்வாகத்திற்கு இந்தியா வருவதற்கான விசாக்கள் வழங்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மனமிறங்கி இப்பொழுதாவது எங்களுக்கு விசா அளித்தார்களே என நிம்மதி பெருமூச்சுடன் இந்தியா புறப்படும் பணியில் பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் மும்முறமாக இருக்கிறது. 

இந்தியா பாகிஸ்தான் இடையே அரசியல் நிலைப்பாடுகளால் இருநாட்டு தொடர்கள் நடத்தப்படுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது. மேலும் இந்தியா வருவதற்கு ஆழ்ந்து யோசித்த பின்னரே பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தது. 

பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் காலம் தாழ்த்தியதை இந்தியாவில் உள்ள ரசிகர்களே சமூக ஊடகங்களில் கடுமையாக எதிர்த்தனர். இந்த நிலையில் தற்போது விசா வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி சர்ச்சைகள் அடங்கியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan team get visa and they will reach Hyderabad on September 27th for the World Cup


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->