விமானம் ஏற சென்ற 3 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியில் மற்ற வீரர்கள்!  - Seithipunal
Seithipunal


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றானது, எவ்வளவு பெரிய அதிகாரங்களில் இருப்பவர்களானலும் சரி, மன்னர்கள் முதல் பாமரர்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.கொரோனாவிற்கு  பிரபலங்கள் சாதாரண மனிதர்கள் என பிரித்துப் பார்க்க தெரியவில்லை. இந்த கொரோனா தொற்றால் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான ஷாகித் அப்ரிடி ஏற்கனவே பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியில் விளையாடி வரும் வீரர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அந்த அணியின் வீரர்களான ஹைதர் அலி, ஷதாப் கான், மற்றும் ஹரீஷ் ராஃப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 24ம் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அந்த தொடர் தொடங்கும் முன்னரே நடத்தப்பட்ட சோதனையில் 3 பேர் பாதிக்கப்பட்டிருப்பது மற்ற வீரர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. அந்த மூன்று வீரர்களுக்கும் எவ்வித அறிகுறியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனவினால் விளையாட்டு உலகமே முடங்கியிருக்கும் நிலையில் முதல் முறையாக ஒரு தொடரை நடத்துவதற்கு தயாராக இருந்த நிலையில் வீரர்கள் 3 பேர் தொற்றால்  பாதிக்கப்பட்டிருப்பது விளையாட்டு உலகத்திற்கு கவலை அளிப்பதாக இருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan cricket players corona tested positive


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal