T20 World Cup; தாரிக்கின் அசத்தல் பந்துவீச்சில் சரிந்த நமீபியா; சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய பாகிஸ்தான்..! - Seithipunal
Seithipunal


10 வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் இன்று மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 03 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. அணியின் கேப்டன் சல்மான் ஆஹா 38 ரன்களிலும், சையும் அயூப் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். பர்ஹான் சதம் (100) மற்றும் சதாப் கான் 36 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அதனை தொடர்ந்து 200 என்ற வவெற்றி இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி, தொடக்கமுதலே பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அணியில் அதிகபட்சமாக லோரன் ஸ்டீன்காம்ப் 23, அலெக்சாண்டர் வோல்ஷெங்க் 20 ஆகியோர் எடுத்தனர். 

இவர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில், நமீபியா அணி 17.3 ஓவரில் 97 ரன்கள் எடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உஸ்மான் தாரிக் 04 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan advances to the Super 8 round


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->