அறிவு, திறமை, தைரியம், மனவலிமை அதிகரிக்க... ஒரு குடம் தண்ணி ஊத்தி... ஒரு பூ பூத்துச்சாம்.!
oru kudam thanni uththi
கிராமத்தில் உள்ள குழந்தைகள் விளையாடும் இந்த விளையாட்டுக்களை பற்றி நவீன கால குழந்தைகளிடம் கேட்டால், இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறதா? என்று கேட்பார்கள்.
இதற்கு காரணம் நவீனமயமாகிவரும் நம் வாழ்க்கை முறைதான். குழந்தைகளை வெளியே விளையாட விடாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கும் பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட விளையாட்டுக்களை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
எத்தனை பேர் விளையாடலாம்?
மூன்று பேருக்கு மேல் எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
இந்த விளையாட்டை விளையாடும் முன்பாக, இருவரை முதலில் தேர்வு செய்துகொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்ட இருவரும், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு, கைகளை முக்கோணம் போல் உயர்த்தியப்படி நிற்பார்கள்.
விளையாடும் மற்ற எல்லாக் குழந்தைகளும் ஒருவர் பின் ஒருவராக முன்னிருப்பவரின் சட்டையைப் பிடித்தப்படி, ஒரே சங்கிலி போல் வரிசையாக நின்றுகொள்ள வேண்டும். கைகளை உயர்த்தி நிற்பவர்களின்; கைகளுக்கிடையில் நுழைந்து 8 போல் சுற்ற வேண்டும்.
பயன்கள் :
இவ்விளையாட்டு எண்களை கற்றுக் கொடுப்பதோடு, தோழமையையும் வளர்க்கும்.
குழந்தைகளின் அறிவு, திறமை, தைரியம், உடல், மனவலிமை, சுயமுயற்சி, தன்னம்பிக்கை, குழு ஒற்றுமை போன்ற பல்வேறு நல்லபண்புகளை வளர்க்கும்.