கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் மாநாட்டில் அனுமதி இல்லை...! முன்னேற்பாடு பணிகளை வெளியிட்ட தவெக
Pregnant women and children are not allowed conference tvk reveals preparations
வருகிற 21-ந்தேதி, மதுரை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டிற்கான பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.இந்த மாநாட்டின் போது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார். இதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்கு திசை பார்த்து அமைக்கப்பட்டிருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டு மேடை 200 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டுள்ளது.இதற்கிடையே, மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அவ்வகையில், மாநில மாநாட்டில் கர்ப்பிணிகள்,குழந்தைகளுக்கு அனுமதியில்லை என்றும் மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு பாஸ் வழங்கப்போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.த.வெ.க. மாநாடு முன்னேற்பாடு பணிகளானது," மாநாட்டில் ஆண்கள் 1,20,000 பேரும், பெண்கள் 25000 பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு.
மாநாடு நடைபெறும் இடத்தில் 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. 400 தற்காலிக கழிப்பறை வசதிகள். மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து உள்ளேயும், வெளியேயும் செல்வதற்காக 18 வழித்தடங்கள்.
மாநாட்டு திடலில் தேவைக்கேற்ப சிசிடிவி கேமராக்கள், 450 ஒலிபெருக்கிள், 20000 மின்விளக்குகள். மருத்துவகுழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதிக்காக சுகாதாரத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
English Summary
Pregnant women and children are not allowed conference tvk reveals preparations