மும்பை அணி அபாரம்! ரோஹித் ஷர்மா, குயண்டன் டி காக் அசத்தல்!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த போட்டியில் விளையாடாத மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். கடந்த போட்டியில் அவருக்கு பதிலாக விளையாடிய அறிமுக வீரர் சிதேஷ் லத் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோஹித் இடம்பெற்றார். 

ராஜஸ்தான் அணியின் சார்பில் கடந்த போட்டியில் காயமடைந்த பென் ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக லிவிங்ஸ்டோன் இணைக்கப்பட்டுள்ளார்.  அதேபோல கடந்த போட்டியில் விளையாடிய பராக் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் கிருஷ்ணப்பா கெளதம் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா டி காக களம் இறங்கினார்கள். 

முதல் ஓவர் மட்டும் கட்டுக்கோப்பாக வீசப்பட்ட நிலையில், அடுத்த ஓவர்களிலிருந்து அவர்களின் பந்துவீச்சை சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும் விளாசினார்.  ரோகித் சர்மாவும், டி காக்கும் அதிரடியாக நொறுக்கி தள்ளினார்கள்.  இருவரும் முதல் விக்கெட்டுக்கு 11 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்திருந்தபோது ரோஹித் சர்மா சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் இந்த ரன்களை அடித்திருந்தார். 

அதற்கடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் சிக்சர் அடித்துவிட்டு 10 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தபோது குல்கர்னி பந்துவீச்சில் போல்டு ஆகி வெளியேறினார். அதற்குப் பிறகு வந்த கடந்த போட்டியில் அசத்திய போலர்ட் இந்த போட்டியில் ஏமாற்றம் அளித்தார். அதிரடியாக விளையாட முடியாத இவர் 12 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே அடித்து ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெளியேறி ஏமாற்றமளித்தார். மறுமுனையில் அபாரமாக விளையாடி டீ காக் அரை  சதம் அடித்து அசத்தினார். அவர் 52 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 81 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

இறுதி கட்டத்தில் பாண்டியாவின் அதிரடி கைகொடுக்க மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்துள்ளது. பாண்டியா 11 பந்துகளில் 27 ரன்கள் ஒரு பவுண்டரி 3 சிக்சருடன் எடுத்திருந்தார்.  ராஜஸ்தான் தரப்பில் சோப்ரா ஆச்சர் 3 விக்கெட்டுகளையும் ஜெயதேவ்  உனட்கட் , தவால் குல்கர்னி 1 விக்கெட்டையும் எடுத்திருந்தார்கள்.  188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான்  ராயல்ஸ் அணி விளயாட ஆரம்பித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mumbai scored 187 runs against rajasthan royals


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal