ஐபிஎல் 2020 தொடரில் பல கோடிகளை தட்டி சென்ற அணிகள்..! - Seithipunal
Seithipunal


துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணி போராடி தோல்வி அடைந்தது. 2013, 2015, 2017, 2019 & 2020 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று மும்பை சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசுகள் வாங்கப்படும். இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடம் பெற்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த லீக் ஆட்டங்களில் அதிக ரன்களை குவிக்கும் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை விழுதும் பந்துவீச்சாளர்களுக்கு பர்ப்பிள் தொப்பியும் வழங்கப்படும். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 14 போட்டிகளில் 1 சதம், 5 அரை சதத்துடன் 670 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப்பை கைப்பற்றியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சேர்ந்த ரபாடா 17 போட்டிகளில் 30 விக்கெட்டுக்களை வீழ்த்தி பர்பிள் கேப்பை கைப்பற்றியுள்ளார். 

மேலும் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் வீரர் - தேவ்தத் படிக்கல் (ஆர்சிபி), ஃபேர் பிளே விருது - ரோகித் சர்மா (மும்பை), கேம் சேஞ்சர் விருது - கேஎல் ராகுல் (பஞ்சாப்), சூப்பர் ஸ்டார் விருது - பொல்லார்டு (மும்பை),  அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருது - இஷான் கிஷன் (மும்பை), பவர் பிளேயர் விருது - டிரென்ட் போல்ட் (மும்பை),  மதிப்புமிக்க வீரர் - ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்).


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mumbai indians get 20 crores


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->