ஓய்வு அறிவிக்கிறார் தோனி! வெளியானது அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தோனி விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பேட்டி ஒன்றில் இந்திய அணியின் பயிற்சியாளர் கூறும்போது, “விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெறுவார்” என தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ரவி சாஸ்திரி கூறியதாக வெளியான செய்தியில் “நானும் தோனியும் கலந்தாலோசித்தோம், இது எங்களுக்கு இடையிலானது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை முடித்து விட்டார், விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவிப்பார். எப்படிப் பார்த்தாலும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்து விடுவார். என கூறியுள்ளார்" இதன்மூலம் இனி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது. 

இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடி உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை அவர் பார்த்த பிறகே இனிமேல் அவர்  டி20 கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துவது குறித்து யோசிப்பார். டி20 கிரிக்கெட்தான் இனி அவருக்கு மீதமிருக்கிறது, நிச்சயம் ஐபிஎல் ஆடுவார். எனக்குத் தெரிந்த வரையில் தோனி இந்திய அணியில் தன்னை வலுக்கட்டாயமாக திணித்து கொள்ள விரும்புபவர் அல்ல, ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் அவருக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MSD will announce retire from ODI Format


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->