இறுதிவரை போராடிய கே எல் ராகுல்.. லக்னோவை வீழ்த்திய பெங்களூர் அணி.!
LSG vs RCB Match RCB Win
ஐபிஎல் நடப்பு கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியில் ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி அதிக ரன்களை குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபாஃப் டு பிளெசிஸ் முதல் பந்தில் டக் அவுட் வெளியேறினார். விராட் கோலி 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 112 ரன்களை எடுத்தார். தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். மனன் வோரா 19 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதத்தை அடித்தார். அவருடன் தீபா ஹூடா நன்றாக விளையாடினார். அதன்பிறகு தீபா ஹூடா 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். தனி ஆளாக போராடிய கேஎல் ராகுல்79 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 14 வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. நாளை மறுநாள் நடைபெறும் 2வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகிறது.