சிங்கம் பழைய வேகத்தோட திரும்புது...! - தோனியின் கம்பேக் குறித்து பயிற்சியாளர் கொடுத்த பவர்ஃபுல் அப்டேட்...!
lion back his old speed Coach gives powerful update Dhoni comeback
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் செய்தியாக, அணியின் நம்பிக்கைக் குரலான எம்.எஸ்.தோனி காயத்திலிருந்து வேகமாக மீண்டு வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த முன்னேற்றத்தை அணி பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி உறுதிப்படுத்தியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில், தோனி காயம் காரணமாக இன்னும் பங்கேற்காதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை உருவாக்கியிருந்தது. ஆனால் தற்போது அவர் மீளுருவாகி வருவது நம்பிக்கையை மீண்டும் எழுப்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்ததாவது,"தோனியின் காயத்திற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் எதிர்பார்த்ததை விட வேகமாக குணமடைந்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற வலைப்பயிற்சியில் அவர் பேட்டிங் செய்ததை பார்த்தேன்; அவரது ஆட்டத்தில் துல்லியமும் நம்பிக்கையும் தென்பட்டது. அது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது” என தெரிவித்துள்ளார்.மேலும், மைதானத்தில் ஓடி பயிற்சி மேற்கொள்வதிலும் தோனி தீவிரம் காட்டி வருகிறார்.
குறிப்பாக இன்னிங்ஸின் இறுதிக்கட்டங்களில் வேகமாக ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலையை மனதில் கொண்டு, தனது ஓட்டத் திறனை கூர்மையாக்கும் பயிற்சியில் அவர் முழுமையாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.“தோனி மீண்டும் அணிக்குத் திரும்பும் திகதி உறுதியாக சொல்ல முடியாது.
ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பதைப் போலவே, அவர் விரைவில் களமிறங்குவார் என்ற நம்பிக்கை என்னிடமும் உள்ளது” என ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
English Summary
lion back his old speed Coach gives powerful update Dhoni comeback