தாதாவை பின்னுக்கு தள்ளுகிறார் விராட் கோலி! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!  - Seithipunal
Seithipunal


நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விராட் கோலி தலைமையில், இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய, இந்திய அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 11 ரன்கள் அடித்தால் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலியை பின்னுக்குத் தள்ளி விடுவார்.

சச்சின் தெண்டுல்கர் 15921 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ராகுல் டிராவிட் 13265 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். சுனில் கவாஸ்கர் 10122 ரன்களுடன் 3-வது இடத்திலும், லட்சுமண் 8781 ரன்களுடனம் 4-வது இடத்திலும், சேவாக் 8503 ரன்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். கங்குலி 7212 ரன்களுடன் 6-வது இடத்தில் இருக்கிறார். அவரை பின்னுக்கு தள்ளி கோலி 6 ஆவது இடத்திற்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kohli need 11 runs to cross ganguly test total runs


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->