IPL LUCKY CHARM கரண் சர்மா; அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விடை பெற்றார் ..! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும், 04 முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய அணிகளில் இருந்தவருமான கரண் சர்மா, சர்வதேச மற்றும் உள்நாட்டுப் போட்டிகள் உட்பட அனைத்து வடிவக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய டி20 அணியில் அறிமுகமான கரண் சர்மா, ஜோ ரூட்டின் விக்கெட்டைக் கைப்பற்றினார். அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி0 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

குறிப்பாக, முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா 264 ரன்கள் குவித்து சாதனை படைத்த வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள் போட்டியிலும் கரண் சர்மா விளையாடியுள்ளார்.

38 வயதான இவர், தற்போது நடைபெற்று வரும் யுபி டி20 லீக் தொடரில் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆகஸ்ட் 25 அன்று லக்னோவில் நடைபெறும் போட்டியே இவரது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி ஆட்டமாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கரண் சர்மா சர்வதேச போட்டிகளில் குறைவாக விளையாடியுள்ளார். ஆனால், ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய சாதனையாளராக விளங்கியுள்ளார்.

கடந்த 2016-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2017-இல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் 2018-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மூன்று வெவ்வேறு அணிகளுக்காகத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரிசையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற தனித்துவமான வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் மற்றும் அல்லாது 2021 ஆம் ஆண்டிலும் சிஎஸ்கே அணியுடன் தனது 04-வது ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி அணியில் இருந்துள்ளார்.

கடந்த 2025-26 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். அடிக்கடி காயங்கள் காரணமாக இந்திய அணியில் இவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

முதல் தரக் கிரிக்கெட்டில் முத்திரை பதித்த கரண் சர்மா உள்நாட்டு முதல் தரக் கிரிக்கெட்டில் 97 போட்டிகளில் விளையாடியுள்ள கரண் சர்மா, 270 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன் 2,866 ரன்களையும் குவித்துள்ளார்.

இதில் 14 முறை 05 விக்கெட்டுகளையும், 2 சதங்களையும் பதிவு செய்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட் பயிற்சியாளராகவும், இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்படப் போவதாகக் கரண் சர்மா தெரிவித்துள்ளார்.

அத்துடன், நீண்டகாலக் கிரிக்கெட் பயணத்திற்கு ஆதரவளித்த குடும்பத்தினருக்கும், பிசிசிஐ மற்றும் ரயில்வே வாரியத்திற்கும் அவர் தனது உருக்கமான நன்றியைத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karn Sharma Announces Professional Retirement


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->