ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இந்திய அணி சாம்பியன்.. வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப்போட்டி ஓமனில் நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதியது.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த வகையில் 13 வது நிமிடத்தில் அங்கட் பீர் சிங் ஒரு கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து இருபதாவது நிமிடத்தில் அர்ஜித் சிங் ஒரு கோல் அடித்தார்.

இதில் பாகிஸ்தான் அணியில் 37-வது நிமிடத்தில் அப்துல் பாஷாரத் ஒரு கோல் அடித்தார். இறுதியாக 2-1 என்ற கணக்கில் இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

அந்த வகையில் இந்திய அணி 2004, 2008, 2005 மற்றும் தற்போது 2023 என நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் என்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.2 லஞ்சமும், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ரூ.1 லஞ்சமும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Junior Asia Cup Hockey Indian team champion Incentive announcement for players


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->