இந்திய அணிக்கு தேர்வான இஷான் கிஷன் வீட்டில், நேற்று நடந்தது என்ன!? மறக்கவே முடியாத நாளாக அமைந்த தருணம்!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு எதிரான 20ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் அறிமுக வீரர்களாக இஷன் கிஷன் சூர்யகுமார் யாதவ் ராகுல் திவேதியா மற்றும் தமிழகத்தின் வரும் சக்கரவர்த்தி ஆகிய 4 பேரும் அறிவிக்கப்பட்டார்கள்.  

இதில் இஷான் கிஷனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக நேற்று அமைந்தது. நேற்று தொடங்கிய விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி தொடருக்கான லீக் ஆட்டத்தில், மத்திய பிரதேசம் அணிக்கு எதிராக களமிறங்கிய ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் கமிறங்கினார். 

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 94 பந்துகளில் 11 சிக்ஸர்கள் 19 பவுண்டரிகளுடன் 173 ரன்களை 28 ஆவது ஓவருக்குள் குவித்து மலைக்க வைத்தார். அந்த அணியானது 422 ரன்களை குவித்தது. அதன்பிறகு விக்கெட் கீப்பிங் செய்த இஷன் கிஷன் 7 கேட்ச்களை பிடித்து அசர வைத்தார். அதில் வருண் ஆரோனின் பந்துவீச்சில் மட்டும் 5 கேட்ச்களை  பிடித்து சாதனை படைத்தார். 98 ரன்களுக்கு அந்த அணியானது ஆட்டமிழந்தது. 324 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது ஜார்கண்ட் அணி. 

இந்த நிலையில் தான் நேற்று இரவு இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு இங்கிலாந்து தொடருக்காக இஷான் கிஷனை தேர்வு செய்து  இருப்பதாக அறிவித்தது. இதனையடுத்து உடனடியாக தனது வீட்டிற்கு இந்த செய்தியை தெரிவித்துள்ளார். இஷான் கிஷன் செய்தியை தெரிவித்த உடன், அடுத்த நான்கு மணி நேரத்திற்கு யாராலும் சாதாரணமாக பேச முடியவில்லை எனவும், 4 மணி நேரம் அழுது கொண்டே இருந்ததாகவும் அவருடைய சகோதரர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். நீண்டநாள் கனவானது தற்போது நிறைவேறியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

இந்தியாவிற்காக 19 வயதிற்குட்பட்டோர் உலக கோப்பை போட்டியில் 2016 ஆம் ஆண்டு இஷான் கிஷன் தலைமையில் இறுதிப்போட்டி வரை அணியை அழைத்து சென்றார். அவரது தலைமையில் விளையாடிய வீரர்களான ரிஷப்  பாண்ட், கலீல் அஹமது, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஏற்கனவே இந்திய அணிக்கு ஆடிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் இவர் ரிஷப் பண்ட் க்கு அடுத்தபடியாக தான் அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பேட்ஸ்மேனாக அணியில் இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏற்கனவே மற்றொரு விக்கெட் கீப்பராக லோகேஷ் ராகுல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ishan kishan family reaction after heard news of kishan's selection


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal