தோனியின் கடைசி ஐபிஎல் சீசனா? சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன் கேப்டன்? சிஎஸ்கேவில் அதிரடி மாற்றங்கள்? ரசிகர்கள் ஷாக்!
Is this Dhoni last IPL season Sanju Samson captain in CSK Dramatic changes in CSK Fans shocked
ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியைச் சுற்றி பெரிய விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் மற்றும் அணியின் அடுத்த தலைமையைக் குறித்து கிரிக்கெட் உலகம் கவனமாக பார்த்து வருகிறது.
ஐபிஎல் வரலாற்றின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான எம்.எஸ். தோனி, தற்போது 2026 சீசனுக்காக அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இந்த சீசன் தான் தோனி மஞ்சள் ஜெர்சியில் விளையாடும் கடைசி சீசனாக இருக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய உத்தப்பா,“இந்த சீசனில் தோனி ஒரு மென்டார் போல அணியில் செயல்பட வாய்ப்பு அதிகம். அவர் முன்பைப் போல 7வது இடத்தில் பேட்டிங் செய்யாமல் 8வது இடத்தில் விளையாடலாம். ஓய்வை முன்னிட்டு அணியில் தனது பங்கினை மெதுவாக குறைத்து, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு முழு பொறுப்பை வழங்கலாம்,” என்றார்.
இதற்கிடையில், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை எதிர்காலத்தில் சிஎஸ்கே கேப்டனாக கொண்டு வர பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தோனிக்குப் பிறகு அணியின் தலைமைக்காக சஞ்சுவை தயார்படுத்தும் முயற்சி இருக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில்,
இந்த சீசனில் தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், அணியின் முடிவின்படி அவரது பணிச்சுமை குறைக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. இதனால் இந்த முறை ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் புதிய சகாப்தத்தை தொடங்க சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது.
இதனால் 2026 ஐபிஎல் சீசன், தோனியின் கெரியரில் ஒரு உணர்ச்சி மிகுந்த கடைசி அத்தியாயமாக அமையுமா? என்ற கேள்வியுடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
Is this Dhoni last IPL season Sanju Samson captain in CSK Dramatic changes in CSK Fans shocked