மும்பையில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதி.! அமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ipl in mumbai permission
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நடைபெற உள்ள ஐபிஎல் ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில அரசு மும்பை வான்கடே மைதானத்தில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவிக்கையில்,

"கொரோனா கட்டுப்பாடுகளுடன் மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளுடன் இந்த போட்டியை நடத்த வேண்டும். பாதுகாப்பு வளையத்தை வீரர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மும்பை வான்கடே மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 12 பேருக்கு நோய் கட்டுப்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.