ஐபிஎல் மினி ஏலம் 2026: சாதனை படைத்த அன்-கேப்டு வீரர்கள்! - Seithipunal
Seithipunal


அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 2026 மினி ஏலத்தில், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ₹25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் ஏலம் எடுக்கப்பட்டு, ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.

கொல்கத்தாவின் அதிரடி வேட்டை:
கையிருப்பில் அதிக தொகையுடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, கிரீனுடன் சேர்த்து முன்னாள் சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரனாவை ₹18 கோடிக்கும், முஸ்டாபிஸுர் ரஹ்மானை ₹9.20 கோடிக்கும் வாங்கியது. நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவை ₹2 கோடிக்கு தட்டித் தூக்கியது.

சிஎஸ்கே-வின் 'அன்-கேப்டு' சாதனை:
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத (Uncapped) இளம் வீரர்களான கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் ஆகிய இருவரையும் தலா ₹14.20 கோடிக்கு ஏலம் எடுத்து ஆச்சரியப்படுத்தியது. இதன் மூலம், அன்-கேப்டு வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனவர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர். மேலும், ராகுல் சாஹரை ₹5.20 கோடிக்கும், சர்ஃபராஸ் கானை ₹75 லட்சத்திற்கும் சிஎஸ்கே வாங்கியது.

பிற முக்கிய ஏலங்கள்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: லியாம் லிவிங்ஸ்டன் (₹13 கோடி).
டெல்லி கேபிடல்ஸ்: அகிப் நபி (₹8.40 கோடி), டேவிட் மில்லர் (₹2 கோடி).
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஜோஷ் இங்லிஷ் (₹8.60 கோடி).
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: வெங்கடேஷ் ஐயர் (₹7 கோடி).
மும்பை இந்தியன்ஸ்: குயிண்டன் டி காக் (₹1 கோடி - அடிப்படை விலை).

அதிக தொகைக்கு விற்கப்பட்ட முதல் 3 வீரர்கள்:
கேமரூன் கிரீன் (₹25.20 கோடி)
மதீஷா பதிரனா (₹18 கோடி)
பிரசாந்த் வீர் / கார்த்திக் சர்மா (தலா ₹14.20 கோடி)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL Auction un caped players csk kkr


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->