#IPL2023 : ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற்ற போவது யார்.. மும்பை - லக்னோ இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போதைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இனிமேல் நடைபெறும் லீக் போட்டியும் மிகவும் முக்கியமாகும். இதில் தோல்வி அடையும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்.

அந்த வகையில் டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

இந்த சீசனில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி  12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

அதேபோல், இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ள லக்னோ அணி அணி 6 போட்டிகளில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் முடிவில்லை என 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 63வது லீக் போட்டியில் லக்னோ அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 

இன்றைய தினம் நடைபெறும் போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாகும். அந்த வகையில் லக்னோ அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் கட்டாய வெற்றி பெற வேண்டும். ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தால் மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்று மற்ற போட்டிகளின் முடிவுகளை பொறுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா என்பது தெரியும்.

அதன் காரணமாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நேருக்கு நேர் 

இவ்விரு அணிகளும் இதுவரை  2 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 2 போட்டிகளிலும் லக்னோ அணியை வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 63rd match LSG vs MI


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->