60 பவுண்டரி, 23 சிக்ஸர், 1 சதம், 4 அரைசதம்.! முதலிடத்தை தட்டி செல்லும் சிஎஸ்கே வீரர்.!  - Seithipunal
Seithipunal


இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த பேட்ஸ்மேன், அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கெய்வாட் முதலிடத்தைப் பிடித்து உள்ளார். 

633 குவித்த ருதுராஜ் கெய்வாட் இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக தேர்வாகிறார். இரண்டாவது இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த பாப் டுப்ளஸ்ஸி 626 ரன்களுடன் இடம்பெறுகிறார்.

இந்த ஐபிஎல் சீசனில் 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள ருத்ராஜ் அதிகபட்சமாக 101 ரன்களை ஒரு ஆட்டத்தில் சேர்த்துள்ளார். 16 ஆட்டங்களிலும் சராசரியாக 45 ரன்களை எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 136.26 வைத்துள்ளார்.

 

நான்கு அரை சதங்களையும்,  அறுபத்தி நான்கு பவுண்டரிகளையும், இருபத்தி மூன்று சிக்ஸர்களையும் ருதுராஜ் அடித்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் உள்ள இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாப் டுப்ளஸ்ஸி, 16 ஆட்டங்களில் ஆடி 633 ரன்களை சேர்த்துள்ளார். அதிகபட்சமாக 95 ரன்களை ஒரு ஆட்டத்தில் சேர்த்துள்ளார்.

16 ஆட்டங்களிலும் 45 ரன்களை சராசரியாக வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 138.20. மேலும் ஆறு சதங்களையும், 60 பவுண்டரிகளையும், இருபத்தி மூன்று சிக்ஸர்களையும் பாப் டுப்ளஸ்ஸி அடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேஎல் ராகுல் 13 ஆட்டங்களில் விளையாடி 626 ரன்களை குவித்துள்ளார். இவர் ஒரு ஆட்டத்தில் அதிகபட்சமாக 88 ரன்கள் சேர்த்துள்ளார்.

நான்காவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அதிரடி மன்னன் ஷிகர் தவான் 587 ரன்களை குவித்துள்ளார். இவர் அதிகபட்சமாக 92 ரன்களை ஒரு ஆட்டத்தில் சேர்த்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2021 MOST RUN PLAYER


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal