இறுதி கட்ட முயற்சியிலும் ஏமாற்றம்: ஏமன் சிறையில் கேரள நர்சுக்கு மரண தண்டனை தேதி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16-இல் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டவரை கொலை செய்த வழக்கில் நிஷா குற்றவாளியாக உள்ளார்.

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா (36) ,ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014-இல் அவரது கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவுக்கு திரும்பினர். அதே ஆண்டில் ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதனால் நிமிஷா பிரியாவால் நாடு திரும்ப முடியவில்லை.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமனில் நர்சாக பணியாற்றிய போது, அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.  அன்று முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அத்துடன், நிஷாவின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த வழக்கில் இருந்து பிரியாவை அவரது தாய் மீட்க போராடி வருகிறார். ஏமன் நாட்டு சட்டப்படி இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடாக பணம் வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும் வழக்கம் உள்ளது. அதன்படி, இதனை பயன்படுத்தி, நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், எதிர்வரும் 16-ஆம் தேதி நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிமிஷா தாயாரின் வழக்கறிஞராக செயல்பட்டு வந்த சாமுவேல் ஜெரோம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: நேற்று, சிறைத்துறை தலைவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான உத்தரவு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன், தண்டனை நிறைவேற்றப்படும் தேதி குறித்து மத்திய வெளியுறவத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் பேச்சு நடந்தாலும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் தேவையான நிதி திரட்ட முயற்சிகள் மேற்கொண்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Death sentence date announced for Kerala nurse in Yemen prison


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->