விமான இன்ஜினுக்குள் சிக்கி நபர் ஒருவர் உயிரிழப்பு; விமான சேவைகளை ரத்து செய்துள்ள மிலன் பெர்கமோ விமான நிலையம்..! - Seithipunal
Seithipunal


இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் இன்று வோலோடியா நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ319 என்ற விமானம் ஸ்பெயினின் அஸ்டூரியாஸுக்கு செல்ல ஓடுதளத்தில் தயாராக இருந்தது.

அப்போது, விமானம் அருகே ஓடிக்கொண்டிருந்த நபர் விமானத்தின் இன்ஜினுக்குள் உள்ளிழுக்கப்பட்டார். 35 வயதுடைய அந்த விமான என்ஜினுக்குள் சிக்கி உயிரிழந்தார். இதன் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் விமானத்தின் இன்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை அங்கு ஏற்படுத்தியியுள்ளது. இந்த சம்பவத்துக்குப் பின்னர், உயிரிழந்தது பயணியோ விமான ஊழியரோ அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் 154 பயணிகளும் 6 பணியாளர்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என வோலோடியா விமான நிறுவனம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு,  சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Milan Bergamo Airport cancels flights after man dies after being trapped in plane engine


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->