114 குதிரைகள் புடைசூழ பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பளித்த பிரேசில் அதிபர்..!
Brazilian President gives special welcome to PM Modi surrounded by 114 horses
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற மோடி அதன் பிறகு, பிரேசிலியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அல்வோராடா மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு முன், பிரதமர் 03 முறை பிரேசில் சென்றுள்ளார். முதலாவதாக ஜூலை 2014-ஆம் ஆண்டில் சென்றார். அடுத்து 2019-இல் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மற்றொரு பயணம் செய்த அவர்,கடந்த ஆண்டு நவம்பரில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என 03 முறை சென்றுள்ளார்.
-8vtrx.png)
இந்நிலையில் தற்போது ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மீண்டும் பிரேசில் சென்றுள்ளார்.அங்கு நடந்த மாநாட்டுக்கு பிறகு, பிரேசிலியா நகரில் உள்ள அல்வோராடா மாளிகைக்கு மோடி சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு 114 குதிரைகளுடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரேசில் அதிபர் லுாலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Brazilian President gives special welcome to PM Modi surrounded by 114 horses