பண பரிமாற்றத்திற்கு ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தும் பயங்கரவாதிகள்: அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள எப்ஏடிஎப்..! - Seithipunal
Seithipunal


சர்வதேச அளவில் பயங்கரவாதிகளுக்கு பண உதவி கிடைப்பதை தடுப்பது மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுப்பது ஆகிய நோக்கங்களுடன் குரூப் 7 (ஜி 7) நாடுகளால் பைனான்சியல் ஆக்சன் டாஸ்க் போர்ஸ் என்ற fatf சர்வதேச அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பின் அறிக்கையின் படி, 2019 புல்வாமா தாக்குதல் மற்றும் 2022 கோரக்நாதர் உள்ளிட்ட பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் ஆன்லைன் பணப்பரிமாற்றங்களை பயன்படுத்தி வருவதாக எப்ஏடிஎப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து fatf சர்வதேச அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டிஜிட்டல் வர்த்தக தளங்கள் மற்றும் நிதி தொழில்நுட்பங்களை பயங்கரவாதிகள் தவறாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகள் நிதி சேகரிக்கவும், தங்கள் அமைப்பை வளர்க்கவும் சொகுசான வழிகளை  கையாண்டு வருகின்றனர் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் நிதி சார்ந்த தொழில்நுட்ப வசதிகள் விரைவான வளர்ச்சியை பயங்கரவாதிகள் நிதியை திரட்டுவதற்கான பல வழிகளை பயன்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

உதாரணமாக 2019-ஆம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் போது, பயங்கரவாதிகள் வைத்த ஐஇடி வெடிகுண்டில் பயன்படுத்தப்படும் அலுமினியம் பவுடரை 'அமேசான்' ஆன்லைன் வணிக தளம் மூலம் வாங்கியதை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 19 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் கோரக்நாதர் கோவிலில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு தேவையான நிதியான ரூ.6.7 லட்சம் நிதியை பே பால் செயலி மூலம் பரிமாற்றம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடப்பதை மறைக்க விபிஎன் சர்வர்களை பயங்கரவாதிகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

FATF has released shocking information about terrorists using online services for money transfers


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->