தொடர்ந்து ஹிந்து கடவுளை அவமதிக்கும் நடிகர் சத்யராஜ்: போலீசில் புகார் அளித்துள்ள பாரத் ஹிந்து முன்னணி அமைப்பாளர்..!
Bharat Hindu Front organizer files police complaint against actor Sathyaraj for continuously insulting Hindu gods
நடிகர் சத்யராஜ் தொடர்ந்து ஹிந்து மதத்தை அவமதித்து வருவைத்தால் அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த சதீஷ் என்பவர் பாரத் ஹிந்து முன்னணி அமைப்பின் சென்னை மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இவர், சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த மாதம், 24-ஆம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் சத்யராஜ் பங்கேற்ற போது, 'ஹிந்து கடவுள்கள் கற்பனை, மிகைப்படுத்தப்பட்ட மாயை'என்று குறிப்பிட்டு பேசினார்.
-3kmpc.png)
அத்துடன், நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மீது, தற்கொலை படை தாக்குதல் நடத்திய, விடுதலை புலிகள் அமைப்பினரை புகழ்ந்து பேசியுள்ளார்.
அங்கு அவர் பேசுகையில், புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரன் படத்தை திறந்து வைத்தது பெருமையாக இருப்பதாகவும், அந்த வாய்ப்பை வி.சி., தலைவர் திருமாவளவன் ஏற்படுத்தி கொடுத்து உள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், நடிகர் சத்யராஜ் தொடர்ந்து ஹிந்து கடவுள்களை அவமதித்து வருகிறார். இதனால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சதீஷ் என்பவர் அவருடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Bharat Hindu Front organizer files police complaint against actor Sathyaraj for continuously insulting Hindu gods