முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் ரங்கசாமி ..?புதுச்சேரியில் வெடித்த அரசியல் பூகம்பம் ..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளதால்அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. புதுச்சேரியில் ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி இடையே நிர்வாக ரீதியாக கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், காலியாக உள்ள சுகாதாரத் துறை இயக்குநர் பதவிக்கு துணை இயக்குநர் அனந்தலட்சுமி பெயரை முதல்வர் ரங்கசாமி பரிந்துரைத்துள்ளார். ஆனால், நேற்று மதியம், இயக்குநர் பதவிக்கு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் செவ்வேள் பெயர் வெளியானதால் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அதிருப்தி அடைந்துள்ளார்.

இதன் காரணமாக சட்டசபையில் இருந்த சபாநாயகர் செல்வத்தை அழைத்து, 'இனி ஒத்து வராது. நான் ராஜினாமா செய்ய போகிறேன்' என கூறி, நேற்று மாலையில் நடைபெற்ற ஆளுநர் விழாவை புறக்கணித்துவிட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் புதுசேரி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

மாநிலத்தின் முதல்வரே ஆளுநர் விழாவை புறக்கணித்து விட்டு வீட்டிற்கு சென்றதால் சபாநாயகர் செல்வம் அதிர்ச்சியடைந்துள்ளார். அத்துடன், அமைச்சர் நமச்சிவாயத்திடம் தெரிவித்து விட்டு, முதல்வர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் அமைச்சர் நமச்சிவாயம், ஆளுநரை சந்தித்து பேசிவிட்டு, பின்னர் அவரும் முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு சென்றுள்ளார்.

முதல்வரை பார்க்க அங்கு ஏற்கனவே காத்திருந்த செல்வத்துடன் சேர்ந்து, முதல்வரை சமாதானப்படுத்தியுள்ளனர் ஆனால், அவர் சமாதானமடையவில்லை. இதனில் இருவரும் விரக்தியுடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rangasamy resigns as Puducherry Chief Minister


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->