இந்திய அணியின் இளம் வீரர் மாரடைப்பால் திடீர் மரணம்! பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இரங்கல்! சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் உலகம்!  - Seithipunal
Seithipunal


29 வயதே ஆன இளம் இந்திய கிரிக்கெட் வீரர் அவி பரத் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த துன்ப நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்திய அணியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக கடந்த 2011ல் செயல்பட்டவர் அவி பரோட். அவர் சௌராஷ்டிரா கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். ஹரியானா அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 

குறிப்பிடத்தகுந்த அளவில் பிரபலமான வீரரான அவர், சமீப காலமாக நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த 2019 - 20ஆம் ஆண்டு ரஞ்சி டிராஃபி கைப்பற்றியபோது இறுதி ஆட்டத்தில் அவர் அரை சதம் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடதக்கது. அண்மையில் நடைபெற்று முடிந்த சையது முஷ்டாக் அலி 20 ஓவர் போட்டித் தொடரிலும் அவர் சதமடித்திருந்தார். 

அவருக்கு நேற்று மாலை திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி, திடீரென்று ஏற்பட்ட இருதய அடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

அவருடைய மறைவுக்கு சௌராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் தற்போதைய பிசிசிஐ செயலாளருமான ஜெய்ஷா இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும் ஜெய் ஷா அவி பரோத்துடன் இணைந்து விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பரோத்திற்கு தாய் மற்றும் மனைவி இருக்கின்றனர். அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian young player avi barot passed away due to cardiac arrest


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->